"அமைச்சர் சீனிவாசன் மீது சட்ட நடவடிக்கை தேவை" - முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கடிதம்

ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமைச்சர் சீனிவாசன் மீது சட்ட நடவடிக்கை தேவை - முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கடிதம்
x
ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை 
 ஒரு அமைச்சரே தேச பக்த செயல் என கூறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். இதே போன்று பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட அமைச்சர் சீனிவாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்