குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் : மூளையாக செயல்பட்ட இருவர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் : மூளையாக செயல்பட்ட இருவர் கைது
x
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் கடந்த 26 ம் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்களில் சசிகுமார், ஜனார்த்தனன், பாலு , உள்பட 8 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டிங்கர் குமார், கண்ணன் ஆகிய இரண்டு பேர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் சைதாப்பேட்டையில் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்