"குறுக்கு வழியில் பணியில் சேருவது வேதனைக்குரியது" - சகாயம் ஐஏஎஸ்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஊழல் தான் முதல் காரணம் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
குறுக்கு வழியில் பணியில் சேருவது வேதனைக்குரியது - சகாயம் ஐஏஎஸ்
x
புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டி உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்கள் தமிழோடு நின்றுவிடாமல் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார். இளைஞர்கள் குறுக்கு வழியில் அரசு பணியில் சேர வேண்டும் என்று நினைத்து முறைகேட்டில் ஈடுபடுவது என்பது வேதனைக்குரியது என்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டார். 
==

Next Story

மேலும் செய்திகள்