நாகை கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பேர் கைது

நாகை கடற்கரையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் அத்துமீறி துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பேர் கைது
x
நாகை கடற்கரையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் அத்துமீறி துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தீவிரவாதிகள் போல வேடமணிந்து ஊடுருவ முயன்றது தெரியவந்த நிலையில் அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்