சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி : இரிடியம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் கேட்ட கும்பல்

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் தருவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி : இரிடியம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் கேட்ட கும்பல்
x
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் சந்தையில் ஆடுகள் விற்கும் முகவராக உள்ளார். அவரிடம் திருப்பூரை சேர்ந்த 3  பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம்  இருப்பதாகவும், அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 25 லட்சம் ரூபாய் தந்தால் இரிடியம் தருவதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது. 

இதை நம்பி சாமிநாதன் 5 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்துள்ளார்.  மீதி பணத்தை கொடுக்க சென்ற போது 3 பேர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் சாமிநாதன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பெரியநாயக்கன் பாளையத்தில்  திருப்பூரை சேர்ந்த பந்தா ஆறுமுகம் உள்ளிட்ட  3 பேரையும் மடக்கி பிடித்த போலீசார், கார், வெள்ளி குடம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்