"சீன நாட்டு பயணிகளை அழைத்து வர வேண்டாம்" - விமான நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு சீனர்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீன நாட்டு பயணிகளை அழைத்து வர வேண்டாம் - விமான நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்
x
சீனாவை உலுக்கி வரும் கொரனோ வைரஸ் காய்ச்சலால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொரனோ வைராஸ் பாதிப்பு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரனோ வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவை சேர்ந்த இருவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ககப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் கோலாலம்பூரில் வழியாக சென்னை வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மறு உத்தரவு வரும் வரை சீன பயணிகளை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டாம் விமான நிறுவனங்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்