பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

மதுரையில், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
x
மதுரையில், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தெப்பக்குளம் அருகே உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகங்களிலும்  வருமான வரி சோதனை நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் இச்சோதனையில் ஈடுபட்டனர். அன்பு செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. இதே போன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புசெழியன் நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்