தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது...?

2020 -21 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது...?
x
தமிழக அமைச்சரவை கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. அதில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 3-ம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை உள்ளிட்டவைகளுக்காக கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. அதன் பிறகு, துறை வாரியாக மானியக் கோரிக்கை உள்ளிட்ட அலுவல்களுக்காக மேலும் 25 நாட்கள் கூட்டத் தொடர் நீடிக்கப்படலாம்.
இடையில் விடுமுறை நாட்கள் போன்றவற்றை கணக்கிட்டால் மார்ச் மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு, பள்ளி தேர்வு உள்ளிட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்