பிரபல காமெடி நடிகர் யோகி பாபு திடீர் திருமணம் - மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்தார்

பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு இன்று திடீரென திருமணம் நடைபெற்றது. தை மாதம் திருமணம் நிகழும் என்ற ரஜினிகாந்தின் வாக்கு பலித்துள்ளது
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு திடீர் திருமணம் - மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்தார்
x
நடிகர் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்து கொண்டிருந்த யோகி பாபு கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 

இரண்டு மூன்று வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றங்களையும் கண்ட யோகி பாபுவுக்கு சொந்த வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

சத்தமில்லாமல் மஞ்சு பார்கவி என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார். இன்று காலை, அவரது குல தெய்வ கோவிலில், இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் வாய் முகூர்த்தம் பலித்திருக்கிறது என்பதிலும், மகிழ்ச்சி... காரணம், தர்பார் ஆடியோ விழாவில் பேசிய யோகி பாபு, தை மாதம் தமக்கு திருமணம் நிகழும் என, ரஜினிகாந்த் வாழ்த்தியதாக கூறியிருந்தார். 

இது குறித்து சமூக வலைதளத்தில் தமது டிவிட்டர் பக்கத்தில் வருகிற மார்ச் மாதம் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார். நடிகர் யோகி பாபுவுக்கு அவரது ரசிகர்களும், பல்வேறு துறை சார்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்