கொடைக்கானல் : ஒரே நாளில் 3 மாணவிகள் காணவில்லை

கொடைக்கானலில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கொடைக்கானல் : ஒரே நாளில் 3 மாணவிகள் காணவில்லை
x
கொடைக்கானலில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மூன்று மாணவிகளும் திங்கட்கிழமை  காலை 8.30 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர்கள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததின் காரணமாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 3 மாணவிகளையும் தேடிவருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்