மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்...

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்...
x
மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. தலைமை கோட்ட அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

ஈரோடு

ஈரோடு பார்க் ரோடு பகுதியில் உள்ள  எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பிற்பகல் ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்த அவர்கள், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்கங்கள் எழுப்பினர். 

சேலம் 

சேலம் கோட்டை பகுதியில் உள்ள  எல்ஐசி நிறுவன ஊழியர்கள் ஒரு மணி நேரம்  பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

கோவை 

கோவை கோட்ட எல்ஐசி தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் ஓசூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் , மதுராந்தகம், பொன்னேரி, திருவொற்றியூர் உள்பட பல ஊர்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்