டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு - தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை சிவகங்கையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு - தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது
x
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4, குரூப்-2 ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 14 பேரும், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை சிவகங்கையில் சிபிசிஜடி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சித்தாண்டியை மடக்கி பிடித்த சிபிசிஐடி போலீசார், காரில் ஏற்றி விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட சித்தாண்டியின் தம்பி வேல்முருகனை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சித்தாண்டியின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு அரசு பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்தாண்டி கைது மூலம் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்