"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
x
எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு  மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாம் பருவ பாடத்தை திட்டத்தை, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்ட அட்டவணை, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளிகல்வித்துறை தெளிவற்ற நிலையில் இருப்பதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகள் வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்