ரூ.9 கோடி செலவில் சாலையை கடக்க லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை கிண்டியில், சாலையை கடக்க 9 கோடி ரூபாய் செலவில் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில், சாலையை கடக்க 9 கோடி ரூபாய் செலவில் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் இந்த நடைமேம்பாலத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி.சாலையை கடக்க இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையை கடக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்வதை தவிர்த்து, இந்த நடைமேம்பாலத்தை மக்கள் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
Next Story

