"கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி"

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி
x
 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 21 வயது பெண்ணை, கடந்த 2018 -ல் முதலாளி உள்ளிட்ட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

* இதுகுறித்த புகாரில், வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்க வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அந்தப் பெண்ணின் தாயார் கடிதம் எழுதினார். 

* அதன் பேரில் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 5 லட்சம் ரூபாயும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. ஆனால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

* ஏற்கனவே மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்திரசூட், கே.எம்.ஜோசப் அமர்வு, முன்னுதாரண உத்தரவு நகல்களை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது. 

* இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் வழங்கலாம் என்றும், அதுகுறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்