மார்க்கம் மாறி சென்ற ரயில் - பயணிகள் அதிர்ச்சி

மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ரயில் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் தடம் மாறி சென்றதை அடுத்து பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்கம் மாறி சென்ற ரயில் - பயணிகள் அதிர்ச்சி
x
மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில், ஆந்திர மாநிலத்திற்குட்பட்ட குண்டக்கல், கிருஷ்ணராஜபுரம் மார்க்கமாக வந்து பங்காரபேட்டை வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில், குண்டக்கல் பகுதியில் ரயில் பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக, திருப்பதி, ரேணிகுண்டா என மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இந்த வழியாக செல்லும்போது பங்காரபேட்டை செல்ல முடியாது. இது குறித்து பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முன்கூட்டியே அறிவுறுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வாணியம்பாடி  பகுதிக்கு வந்த போது ரயில் தடம் மாறி செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், 10 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. பாதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ்புரம், பங்கார்பேட்டை, குப்பம் ஆகிய பகுதிக்கு செல்ல வேண்டிய  பயணிகள், ஜோலார்பேட்டை சந்திப்பில் இறங்கி மாற்று இரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்