தீட்டுக்கழிக்க தி.மு.க.வினர் பூஜை நடத்தியதாக புகார் - ஆட்சியரிடம் அ.தி.மு.க.-வினர் புகார்

கும்பகோணம் ஒன்றிய குழு பெருந்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த காயத்திரி தேர்வாகி உள்ளார்.
தீட்டுக்கழிக்க தி.மு.க.வினர் பூஜை நடத்தியதாக புகார் - ஆட்சியரிடம் அ.தி.மு.க.-வினர் புகார்
x
கும்பகோணம் ஒன்றிய குழு பெருந்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த காயத்திரி தேர்வாகி உள்ளார். கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முதல் கூட்டத்தில், புண்ணியதானம் பூஜைகள் நடத்தியதாக எழுந்த புகார் குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் விளக்கம் கேட்டனர். மேலும், ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகவும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலில் முடிந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்