"பாஜக பிரமுகர் கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம்" - திருச்சி காவல் ஆணையர் பேட்டி

தனிப்பட்ட விரோதமே பாஜக பிரமுகர் கொலைக்கு காரணம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ தெரிவித்துள்ளார்.
x
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி மிட்டாய் பாபு சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர் ஹரி பிரசாத்தையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் 5 பேர் உடந்தையாக இருப்பதாக இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ, தனிப்பட்ட விரோதமே இந்த கொலைக்கான காரணம் என்றும், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்