கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தாலுகா அலுவலகம் முன்பாக திமுகவினர் போராட்டம் நடத்த இருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகும் தடையை மீறி திமுகவினர் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story