சங்கரன்கோவில் கட்டண உயர்வு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் பக்தர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் கட்டண உயர்வு குறித்த அமைதி பேச்சு வார்த்தையில் பக்தர்கள் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் கட்டண உயர்வு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் பக்தர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம்
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் கட்டண உயர்வு  குறித்து கோயில் நிர்வாகம் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடையே ஆர்டிஓ குமாரசாமி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அப்போது பேசிய பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களால் நிர்வாக சீர்கேடு மட்டுமின்றி வசூல் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டினர். 400 ரூபாய்க்கு கூட பெருமானம் இல்லாத பொருட்களை வலுக்கட்டாயமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்  

அப்போது கோவில் உதவி ஆணையாளர் சங்கர் பக்தர்களை அலட்சியமாக நடத்தியதோடு ஒருமையில் பேசியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகும் சூழல் உருவானது. இதனையடுத்துஒருமையில் பேசாமல் நீங்கள் என்று மரியாதையாக பேசுங்கள் என உதவி ஆணையரை ஆர்டிஓ குமாரசாமி வலியுறுத்தினார். பின்னர் பழைய கட்டணமே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து  ஆர்டிஓ பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்