"குளறுபடி இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி உள்ளோம்" - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தலைமை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
குளறுபடி இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி உள்ளோம் - அமைச்சர் செல்லூர் ராஜு
x
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தலைமை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கல் பரிசு தொகுப்பு எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவருக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாரபட்சமின்றி நிதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்