சீனாவில் இருந்து கோவைக்கு திரும்பிய 8 பேர் 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

சீனாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை, திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா ஒருவர் என எட்டு பேர் வந்துள்ளனர்.
சீனாவில் இருந்து கோவைக்கு திரும்பிய 8 பேர் 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
x
சீனாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம்  பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை, திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா ஒருவர் என எட்டு பேர் வந்துள்ளனர். இவர்களுக்கு சுகாதாரத்துறையினர்   மருத்துவ பரிசோதனை நடத்தியதில், கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்பது  தெரியவந்துள்ளது. சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது எனவும், 28 நாட்கள் பொது வெளியில் செல்லாமல் இருக்க  வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு தொடர்ந்து  சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்