"அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாறாது" - அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
x
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து நிர்வகிக்கும் உயர்கல்வித்துறையின் முடிவை ஆலோசித்து செயல்படுத்த 5 அமைச்சர்கள், 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த  குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகிய 5 அமைச்சர்கள் இடம்பெற்று இருந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமல்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். எந்த காலத்திலும் அண்ணா பல்கலை கழகம் பெயர் மாறாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்