6 மாத ஆண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை என புகார் - குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை

புதுக்கோட்டை அருகே 6 மாத குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் மற்றும் குழந்தையை ஊர்மக்களே குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 மாத ஆண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை என புகார் - குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரிய கல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காலப்பன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் அதை விற்பனை செய்ததாக குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்ற போது காலப்பனும் செல்வியும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. குழந்தை மற்றும் பெற்றோரை ஒப்படைப்பதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். சில மணி நேரத்திற்கு வீட்டுக்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தையை சுற்றி வளைத்த ஊர்மக்கள் அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குழந்தையை விற்ற விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்