பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பிப்.11 வரை திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்குகாவல் நீட்டிப்பு வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு, பிப்ரவரி 11ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பிப்.11 வரை திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்குகாவல் நீட்டிப்பு வழக்கு
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீதான விசாரணை மற்றும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் இன்று முடிந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து காலை11 மணிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பிப்ரவரி 11 ம் தேதி வரை காவலை நீட்டித்து வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கும் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து 68 பேரிடம் விசாரித்த ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நகல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெண்ணின் சகோதரனை மணிவண்ணன் தாக்கிய புகாரில் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.Next Story

மேலும் செய்திகள்