தேசிய பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

தேசிய பட்டியலின நல ஆணையத்தை, கலைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேசிய பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
x
தேசிய பட்டியலின நல ஆணையத்தை, கலைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கத்தின் தலைவர் செல்வகுமார் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், பரமக்குடி துப்பாக்கி சூடு, மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியான சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதில், தேசிய பட்டியலின ஆணையம் விரைந்து செயல்படவில்லை எனவும், அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பொது நல மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.   Next Story

மேலும் செய்திகள்