"10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டிய இளைஞர்கள்"

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டிய இளைஞர்கள்
x
கூறைநாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, பழகி வந்துள்ளார். இதனிடையே, மாணவியை பலாத்காரம் செய்ததுடன் அதை, செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், சந்தோஷ், அந்த வீடியோவை, அவரது நண்பரான அக்களுரை சேர்ந்த கண்ணனுக்கு அனுப்பியுள்ளார். இதில், சபலப்பட்ட கண்ணன், வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தபோது, மாணவியின் பெற்றோர் வந்ததால் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த,  போலீசார், இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்