தஞ்சை பெரியகோயிலில் புதிய கொடிமரம் நிலைநிறுத்தம்

தஞ்சை பெரிய கோயிலில் புதிய கொடிமரம், ஐந்து மணி நேரத்திற்கு பின்னர் நிலை நிறுத்தப்பட்டது.
x
 வரும் 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கியது. இந்நிலையில், 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கொடிமரத்திற்கு மாற்றாக, புதிதாக பர்மாவிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 40 அடி உயரத்தில் புதிய கொடிமரம் வாங்கப்பட்டது. இந்த கொடிமரம் 15 நாட்களாக சரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபத்துக்கு முன்பாக நிறுவப்பட்டது. இந்த கொடிமரம் 5 மணி நேரத்திற்கு பின்னரே, நிலை நிறுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்