திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
x
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் விஜய ரகு. காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வேலை பார்த்து வந்த இவர், பாஜக மண்டல செயலாளராகவும் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த மிட்டாய் பாபு என்பவர் நம்பர் லாட்டரியை விற்பது குறித்து போலீசாருக்கு விஜயரகு தகவல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மிட்டாய் பாபு, விஜயரகு மற்றும் அவரது மைத்துனரை கடந்த ஆண்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மிட்டாய் பாபு கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 11ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த மிட்டாய் பாபு, விஜய ரகுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இன்று காலை பணியில் இருந்த விஜயரகுவை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயரகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளை பிடிக்க உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்