யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வுசெய்ய குழு

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வுசெய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வுசெய்ய குழு
x
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வுசெய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. விதிமீறல் கட்டிடங்களை ஆய்வுசெய்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக அறிக்கை தர 3 நபர் குழுவினை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்த குழுவில் இடம்பெறும் நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மனுதாரர், எதிர் மனுதாரர் உள்ளிட்டோருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், உறுப்பினர்கள் பெயரை இறுதிசெய்ய கால அவகாசம் கோரிப்பட்ட நிலையில், அதனை ஏற்று தலைமை நீதிபதி ஒரு நாள் அவகாசம் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்