சென்னை : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை இஸ்லாமியர்கள் இரவு 11 மணி அளவில் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
x
சென்னை அண்ணா  சாலையில் உள்ள ரிச்சி தெருவில், கடை வைத்து இருக்கும் வடமாநிலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் NRC மற்றும் CAA-சட்டத்தை ஆதரித்து பேனாவில் அச்சடித்து வினியோகம் செய்துள்ளார். அதை, அப்பகுதியின் இஸ்லாமிய வியாபாரிகள் கண்டித்ததாக வந்த புகாரில் 4 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார், காவல்நிலையம்  அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதனால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்கள் இருவர், கடையின் மீது முட்டைகளை வீசியதாக கூறப்படுகிறது.  அவர்களையும் பிடித்து சென்ற போலீஸார், மொத்த 6 பேரை சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தகவல் பரவியதும் இஸ்லாமிய அமைப்புகளின் தொண்டர்கள், பொது மக்கள், மாணவர் அமைப்பினர் என 2000 பேர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரை  விடுவிக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினார். பதற்றமான சூழல் ஏற்பட்டதால்,  துணை ஆணையர் தர்மராஜன் சம்பவ இடத்திற்கு சென்று, இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 6 பேரையும் காவல் துறை விடுவித்தது.  அதன் பின்னர், அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்