3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்

நேரு உள்ளிட்ட தலைவர்களால் 3 மாதங்களில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம், 3 நாட்களில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர்,  பணமதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். நாட்டில் விவசாயம், தொழில் வளர்ச்சி முடங்கி போயுள்ளதாகவும் அவர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் என்றும் அவர் கூறினார். 


"வீட்டு சிறையில் 3 முன்னாள் முதல்வர்கள் "

காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக 3 முன்னாள் முதலமைச்சர்கள் விசாரணை இன்றி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறினார். தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வோமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்