சிவகங்கை : இறந்த கோயில் காளைக்கு பிரமாண்ட அஞ்சலி

சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.
சிவகங்கை : இறந்த கோயில் காளைக்கு பிரமாண்ட அஞ்சலி
x
சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் மரியாதை அளிக்கப்படும் அந்த காளையானது, நேற்று உடல்நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து காளையின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள், காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றை ஆடி, டிராக்டரில், காளையின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்