தீவிரவாதி காஜா மொய்தீனை இயக்கும் மற்றொரு தீவிரவாதி : டெல்லி, கர்நாடகா, தமிழக போலீசார் அதிர்ச்சி

தீவிரவாதி காஜா மொய்தீனை பின்னணியில் இருந்து இயக்கிய மற்றொரு தீவிரவாதியே, அவர்களின் தலைவன் என வெளிவந்த தகவலால் 3 மாநில போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீவிரவாதி காஜா மொய்தீனை இயக்கும் மற்றொரு தீவிரவாதி : டெல்லி, கர்நாடகா, தமிழக போலீசார் அதிர்ச்சி
x
இரண்டு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் விடுதலையான காஜா மொய்தீன், சையத் நிவாஸ் மற்றும் முகம்மது சலீம் ஆகிய 3 பேர் கடந்த நவம்பர் மாதம் தலைமறைவானார்கள். இந்த நிலையில் அவர்களை தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்களுக்கு உதவியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீவிரவாத இயக்கத்துக்கு தலைவன் காஜா மொய்தீன் இல்லை என்றும், அவரை பின்னணியில் இருந்து இயக்கும் நபர் வேறொருவர் எனவும் தெரியவந்தது. அவர்  கொடுக்கும் உத்தரவின்பேரில் தான் காஜா மொய்தீன் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் காஜா மொய்தீனை பிரத்யேக மென்பொருள் மூலம் தொடர்பு கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலால் தமிழக போலீசார் மட்டுமின்றி டெல்லி, கர்நாடக மாநில போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்