சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பெங்களூருவில்  அப்துல் சமீம் ,  தவ்ஃபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் பெங்களூருவில் தங்க இடம் கொடுத்து உதவி செய்ததாக உசைன் ஷெரீப் என்பவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் உசைன் ஷெரீப்பை புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்