வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகளுக்கு 3 நாள் நீதிமன்ற காவல்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம், தவுபிக் ஆகியோரை 3- நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகளுக்கு 3 நாள் நீதிமன்ற காவல்
x
குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் தமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெய்சங்கர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நடுவர், வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதன்பின்னர், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக தீவிரவாதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்