"மணமான பெண் இறந்தால் தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
பதிவு : ஜனவரி 15, 2020, 01:24 AM
மணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கு விஜயநாகலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருந்த நிலையில் 2013ம் ஆண்டு விஜயநாகலட்சுமி இறந்தவிட்டார். இந்நிலையில், வாரிசு சான்றிதழில், விஜயநாகலட்சுமியின் தாயார் சேகரியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கணவர் கிருஷ்ணா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே அவரது தாயாரை வாரிசாக ஏற்க முடியும் என்றும், ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் ஆக முடியும் என்றும் இறந்த பெண்ணின் தாய் தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது என உத்தரவிட்டார். மேலும், விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததுடன், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15ம் தேதிக்குள் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

வயல்வெளிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு

வயல்வெளியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

32 views

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1757 views

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - சாதிக்க துடிக்கும் இளம் இந்திய படை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

469 views

நீலகிரி : ரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்

நீலகிரி அருகே ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றது.

15 views

மிரட்டும் கொரோனா வைரஸ் : விமான பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

48 views

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.