சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: இருவரின் மாறுவேட மாதிரி தோற்ற படங்கள் வெளியீடு

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக தேடப்படும் இருவரின் மாறுவேட மாதிரி தோற்ற படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: இருவரின் மாறுவேட மாதிரி தோற்ற படங்கள் வெளியீடு
x
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்ட்ட சம்பவம் தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சமீம், இடலாக்குடி தவுபீக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தேடப்படும் இருவரின் மாறுவேட மாதிரி தோற்ற படங்களை கேரள காவல் துறை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்