சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 2 பேரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரையை சேர்ந்த சக்காரியா, அல்ஹபீப் ஆகியோரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 2 பேரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
x
மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பஷீர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன் சகோதரர்கள் சக்காரியா மற்றும் அல்ஹபீப் ஆகியோர் மீது எந்த வழக்குகளும் இல்லாத நிலையில் நெல்லை கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரர்களை போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும், சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் 2 பேரையும் சேர்க்க போலீசார் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே சக்காரியா, அல்ஹபீப் ஆகியோரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்