வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு : இஜாஸ் பாஷாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இஜாஸ் பாஷாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு : இஜாஸ் பாஷாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு, சிம் கார்டு கொடுத்து உதவியதாக 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரூவில் இஜாஸ் பாஷா என்பவரை கைது செய்த,  போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இஜாசிடம் விசாரணை நடத்திய, எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இஜாஸ் பாஷா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான இஜாஸ் பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இஜாஸ் பாஷா மும்பையில் 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்