சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
x
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8ஆம் தேதி, பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை  மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வில்சன் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்