திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல் - தாக்கிய​வர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
பதிவு : ஜனவரி 13, 2020, 12:26 PM
திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவியாக  உள்ளவர் ஜான்சி திவ்யா. திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து வட்டச் சாலைக்கு  ஆட்சியர் அனுமதியுடன் சிலர் மணல் எடுத்து லாரியில் கொண்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில், அ.தி.மு.க வை சேர்ந்த மூக்கன்  மற்றும் கஸ்துரி கருப்பையா உள்ளிட்ட சிலர் அந்த லாரியை மறித்து பணம்  கேட்டு தகராறு ​செய்துள்ளனர். அவ்வழியாக வந்த  ஜான்சி திவ்யா அதுகுறித்து விசாரித்து உள்ளார். கணவர் சகாயராஜூடன் வந்த ஜான்சி ​திவ்யாவை , மூக்கன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து த​ங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஜான்சி திவ்யா, மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

807 views

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

"மோடியும், அமித்ஷாவும் 300 எம்ஜிஆருக்கு சமம்" - பாஜக கண்டன கூட்டத்தில் ராதாரவி பேச்சு

மோடியும் அமித்ஷாவும் 200 கருணாநிதி ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

278 views

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.க. பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினார்கள்.

227 views

நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு

ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

மார்ச் 9ஆம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம், அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப் பணித் துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.