சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை - 8 மாத குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்
சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி 8 மாத குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ரந்தோஷ் - ஜானி தம்பதியினர் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களது 8 மாத குழந்தையை சினிமாவில் நடிக்க
வைப்பதாக ஒரு பெண் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஜானி தனது குழந்தையை தூக்கி கொண்டு அந்த பெண்ணுடன் சென்றுள்ளார்.
மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அந்த பெண் ஜானியை நிற்க வைத்து விட்டு குழந்தையுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானி தனது மாமியாருடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், நூதன முறையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story