கன்னியாகுமரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

கன்னியாகுமரி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில், இந்த துணிகர சம்பவம்  நிகழ்ந்துள்ளது. அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை, மர்மநபர்கள் சுட்டுக்கொன்று விட்டு, அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வில்சனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்