யோகா விழிப்புணர்வு - ஹலோ எப்.எம்-க்கு விருது வழங்கியது மத்திய அரசு

யோகாவை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்-க்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
x
சர்வதேச யோகா தின ஊடக விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தன்று சிறப்பாக செயல்பட்ட ஊடகங்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் 6 பேர் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருதுகளை வழங்கினார். யோகாவை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு விருது வழங்கப்பட்டது. இதனை ஹலோ எப்.எம். இயக்குநர் ஆதவன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார். இதேபோல்  11 வானொலிகளுக்கும், 11 நாளிதழ்களுக்கும், 8 தொலைக்காட்சிகளுக்கும் ​விருதுகள் வழங்கப்பட்டன 

Next Story

மேலும் செய்திகள்