செயற்கை கருவூட்டல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு...

செயற்கை கருவூட்டல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
செயற்கை கருவூட்டல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு...
x
நடமாடும் இனப்பெருக்க சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. தமிழக அரசு. இந்நிலையில், இந்த சட்டம் பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களையும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும் முற்றிலும் ஒழிக்க நினைக்கும் மறைமுக சூழ்ச்சி என்று குற்றம்சாட்டுகின்றனர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள். இந்த சட்டத்தில் காளை மாடுகள் விந்து உற்பத்திக்கு ஏற்ற வகையில் இல்லை என்றால் அவற்றை கொல்ல வேண்டும் என்றும், தன்னுடைய வீட்டில் வளர்க்கின்ற காளையை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த கூடாது என்றும் விதிமுறைகள் உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் இந்த  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் சங்க  மாநில செயலாளர் ரஞ்சித், உதகையில் விந்தணு உற்பத்தி மையம் அமைய உள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்