கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்
x
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராவுத்தர், சையத் முஸ்தபா, உதயகுமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள 817 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்