நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - மே 3ஆம் தேதி நீட் தேர்வு

நீர் தேர்விற்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்று இரவுடன் நிறைவடைகிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - மே 3ஆம் தேதி நீட் தேர்வு
x
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மே 3ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பலர் விண்ணப்பம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்று இரவு வரை நீட்டித்து அறிவித்தது. இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள், திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருக்கலாம் என தெரிகிறது..


Next Story

மேலும் செய்திகள்