காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி என வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி என வேதனை
x
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைலாசபட்டியில், கஞ்சா விற்பனை தொடர்பாக, மனோஜ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அவரது வீட்டையும், வீட்டின் முன் நிறுத்தி இருந்த வாகனத்தையும் கஞ்சா விற்பவர்கள் சேதப்படுத்தினர். கஞ்சா விற்று வரும், ஜெயபால் மற்றும் அவரின் மகன் நந்தா ஆகியோர் மீது  காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, புகார் கொடுப்பவரின் விபரத்தை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் தாக்கப்பட்டது குறித்து  புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அதிர்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறி கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்