"குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு போராட்டம் நடந்தால் எதிர்ப்பு போராட்டம் தீவிரம​டையும்" - திருமாவளவன்

எந்த அளவிற்கு பா.ஜ.வி.னர் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான போராட்டங்களை நடத்துகிறார்களோ அதைவிட அதிகமாக எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடையும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
எந்த அளவிற்கு பா.ஜ.வி.னர் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான போராட்டங்களை நடத்துகிறார்களோ அதைவிட அதிகமாக எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடையும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மாநகராட்சியை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி, தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். நாட்டில் 
பாசிச போக்கு மிகவும் ஆபத்தானது என்றும்,  ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்